Paristamil Navigation Paristamil advert login

உலகிலேயே அழகான கையெழுத்து

உலகிலேயே அழகான கையெழுத்து

2 புரட்டாசி 2023 சனி 06:08 | பார்வைகள் : 3658


நேபாளத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் உலகிலேயே மிகவும் அழகான கையெழுத்து என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பொதுவாகவே கையெழுத்து அழகாக இருந்தால் அவர்களுக்கு மதிப்பெண்கள் கூடியதாக இருக்கும் என்று கூறுவார்கள்.  

அந்தவகையில் நேபாளத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் பிரகிருதி மல்லா என்ற அந்த மாணவி தனது 14-ம் வயதில் எழுதிய கடிதத்தை பார்த்து பலரும் வியந்துள்ளனர்.

இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாணவி பிரகிருதி மல்லா ஐக்கிய அரபு எமிரேட்சில் 51-வது ஆண்டு ஒற்றுமை தினத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வாழ்த்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

மேலும் இவர் எழுதிய கடிதமானது இணையத்தில் வைரலாகி பெருமளவிளான வரவேற்பை பெற்றுள்ளது. 

அதைப்பார்த்த பயனர்கள் பலரும் ஆச்சர்யப்பட்டு மாணவியை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

வர்த்தக‌ விளம்பரங்கள்