Paristamil Navigation Paristamil advert login

அரண்மனை- 4 திரைப்படம் விரைவில் !

அரண்மனை- 4 திரைப்படம் விரைவில் !

28 பங்குனி 2024 வியாழன் 11:45 | பார்வைகள் : 678


சுந்தர்.சி இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் அரண்மனை. இந்த திரைப்படத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லக்ஷ்மி, வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

அரண்மனை பாகம் ஒன்றின் வெற்றி காரணமாக, 'அரண்மனை-2' திரைப்படத்தை 2016 இல் த்ரிஷா, ஹன்சிகாவை வைத்து சுந்தர் சி இயக்கினார்.அந்த படமும் வெற்றி பெற்றது.

அதனையடுத்து, 2021 ஆம் ஆண்டு அரண்மனை படத்தின் 3 ஆம் பாகத்தை இயக்கினார்.அப்படத்தில், ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் இரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் தற்போது உருவாகியுள்ளது.இப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு மற்றும் சுந்தர் சி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றினை வெளியிட்டு அறிவித்துள்ளது.
அரண்மனை திரைப்படத்தின் முதல் மூன்று பாகங்கள் போலவே குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான படமாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அரண்மனை- 4 திரைப்படத்தின் இந்த புதிய போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.-

வர்த்தக‌ விளம்பரங்கள்