Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!

இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!

25 பங்குனி 2024 திங்கள் 14:45 | பார்வைகள் : 643


கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று(25) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 298 ரூபாய் 45 சதமாக பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 99 சதமாக காணப்பட்டது.

அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 307 ரூபாய் 99 சதமாக பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 308 ரூபாய் 69 சதமாக காணப்பட்டது.

வர்த்தக‌ விளம்பரங்கள்