Paristamil Navigation Paristamil advert login

 சஞ்சு சாம்சனை பாராட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ்

 சஞ்சு சாம்சனை பாராட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ்

25 பங்குனி 2024 திங்கள் 09:15 | பார்வைகள் : 459


கேப்டன் சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரஜினிகாந்த் பட வசனம் மற்றும் விஜய்யின் லியோ படத்தின் பாடல் மூலம் பாராட்டியுள்ளது.

ஐபிஎல்-லில் நேற்று நடைபெற்ற  போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 0 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் கேப்டன் சஞ்சு சாம்சன் 52 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்று ம் 3 பவுண்டரிகள் விளாசி 82 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

எதிரணியில் நிக்கோலஸ் பூரன் (64), கேப்டன் கே எல் ராகுல் (58) ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனின் சிறப்பான பேட்டிங்கை பாராட்டும் வகையில், நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தின் Badass பாடலை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டுள்ளது.

மேலும் போட்டிக்கு முன்னதாக ரஜினி திரைப்படத்தின் பிரபலமான வசமான “நான் எப்போ வருவன், எப்படி வருவன் அப்படினு யாருக்கும் தெரியுதா… ஆனா வர வேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன்” என்பதை சஞ்சு சாம்சனுக்கு குறிப்பிட்டு பதிவு ஒன்றையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட்டுள்ளது.

தென்னிந்தியாவின் கிரிக்கெட் ரசிகர்களை கவரும் வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்