Paristamil Navigation Paristamil advert login

வாடிவாசல் கைவிடப்பட்டதா..? அமீர் அதிரடி

வாடிவாசல் கைவிடப்பட்டதா..? அமீர்  அதிரடி

9 வைகாசி 2024 வியாழன் 10:21 | பார்வைகள் : 263


சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படம் குறித்த அப்டேட்டை இயக்குனர் நடிகர் அமீர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அவரது வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

முதன் முறையாக இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். எழுத்தாளர் செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பாக வெளிவந்த சூர்யாவின் மாடு பிடிக்கும் பயிற்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப்பட்டது.

இதேபோன்று டைட்டில் அறிவிப்பு வீடியோவும் ரசிகர்களை கவர்ந்தது. இருப்பினும் வெற்றிமாறன் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை இயக்க வேண்டி இருப்பதால் உடனடியாக வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படவில்லை. இதே போன்று சூர்யாவும் வெவ்வேறு படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவரது கங்குவா திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இன்னொரு பக்கம் வெற்றிமாறன் தனது விடுதலை இரண்டாம் பாகத்துடைய பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே வாடிவாசல் திரைப்படத்தின் ஷூட்டிங் இப்போதைக்கு மேற்கொள்ளப்படாது என்று தகவல்கள் பரவின. இந்நிலையில் வாடிவாசல் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள அமீர் அந்த படம் குறித்த தகவல்களை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது- வாடிவாசல் படம் குறித்து நானாக வெற்றிமாறனிடம் கேட்க மாட்டேன். அவரே அவ்வப்போது பல தகவல்களை என்னிடம் கூறிக் கொண்டே இருப்பார். இப்போது ஷூட்டிங் ஆரம்பிக்கிறேன் என்பார். இன்னொரு நாள் லேட் ஆக ஆரம்பிக்கிறோம் என்பார்.

அந்த கேரக்டருக்கு ஒரு பாடல் ரெக்கார்டிங் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறுவார். அவர் சொல்வதை எல்லாம் அப்படியா! என்று கேட்பேன். திடீரென்று ஒரு நாள் வாடிவாசல் படம் இப்போதைக்கு பண்ணவில்லை என்பார். அதையும் ஓ, அப்படியா! என்று கேட்டுக் கொள்வேன்.


சமீபத்தில் 4 நாட்களுக்கு முன்பாக வெற்றியும் நானும் சந்தித்தோம். அப்போது வாடிவாசல் படத்தை நாம திரும்ப ஆரம்பிக்க போறோம் என்றார். அதற்கு அப்படியா சந்தோசம் என்று பதில் அளித்தேன். என்று அந்த நேர்காணலில் அமீர் கூறி உள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்