Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் நாடானது லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புடன் போர் வெடிக்கும் அபாயம் 

இஸ்ரேல் நாடானது லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புடன் போர் வெடிக்கும் அபாயம் 

28 சித்திரை 2024 ஞாயிறு 06:13 | பார்வைகள் : 1427


ஹமாஸ் படைகள் இஸ்ரேல் எல்லையில் கடந்த  ஒக்டோபர் 7ம் திகதி திடீர் தாக்குதலை முன்னெடுத்த நிலையில், நாட்டின் வடக்கில் இருந்து இஸ்ரேலியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அதன் பின்னர் லெபனானில் ஹிஸ்புல்லாவுடன் முழு அளவிலான போர் வெடிக்குமா என்பதில் இனி எந்த சந்தேகமும் இல்லை என்றே பரவலாக பேசப்பட்டது. ஆனால் பெரும்பாலான மக்களின் ஒரே கேள்வி, எப்போது என்றே இருந்துள்ளது.

எல்லையில் வசிக்கும் இஸ்ரேலிய மக்களும் ஆயுதங்களுடன் ஹிஸ்புல்லா முன்னெடுக்கும் தாக்குதலை எதிர்பார்த்தே உள்ளனர். இஸ்ரேலின் வான்பாதுகாப்பு என்பது 2011 முதல் மக்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவே இருந்துள்ளது.

ஆனால் அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர் அந்த நம்பிக்கையும் பெரும்பாலான மக்களிடம் இல்லை என்றே கூறப்படுகிறது. காஸா மீது பதிலடித் தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்த முதல் நாள், ஹிஸ்புல்லா மீது ஒரு தடுப்பு தரைவழித் தாக்குதலைத் தொடங்கும் இஸ்ரேலின் முடிவை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிராகரித்திருந்தார்.

அப்படியான சூழல் பிராந்திய மோதலைத் தூண்டக்கூடியது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வந்துள்ளதுடன், நாளுக்கு நாள் மிகவும் ஆபத்தானதாகவும் மாறியுள்ளது.

தற்போது வடக்கு இஸ்ரேலில் வசிக்கும் சுமார் 60,000 பேருக்கு வெளியேற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது, மேலும் 20,000 பேர் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் வெளியேறியுள்ளதுடன், அறுவடைகள் சேதமடைந்து வணிகங்களும் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது.

வெறிச்சோடிய தோட்டங்கள் மற்றும் பூங்காக்களில் களைகள் உயரமாக வளர்ந்துள்ளன. லெபனானின் எல்லையில், சுமார் 100,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையே முன்னும் பின்னுமாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் 71 லெபனான் குடிமக்கள் மற்றும் ஹிஸ்புல்லா உட்பட பிற பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 500 போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

2006 கோடையில் 34 நாட்கள் நடந்த கடைசி லெபனான் போரை விட லெபனானில் தற்போது அதிகமான போராளிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்