Paristamil Navigation Paristamil advert login

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!

28 பங்குனி 2024 வியாழன் 10:18 | பார்வைகள் : 683


கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய  பட்டபெந்தி   4 வருட  கடூழியச் சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கும் அவர் குற்றவாளி என சட்ட மா அதிபரால் அறிவிக்கப்பட்டது.

2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூரகல  பள்ளிவாசல்  தொடர்பில் தெரிவித்த கருத்து தேசிய மற்றும் மத நல்லிணக்கத்துக்கு  பங்கம் விளைவித்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டது
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்