Paristamil Navigation Paristamil advert login

அவுஸ்திரேலியாவின் மிரட்டல் பந்துவீச்சு

அவுஸ்திரேலியாவின் மிரட்டல் பந்துவீச்சு

29 ஆடி 2023 சனி 10:46 | பார்வைகள் : 2501


டப்லினில் மகளிர் அவுஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி சாம்பியன்ஷிப் 3வது ஒருநாள் போட்டி நடந்தது.

அயர்லாந்து அணி முதலில் துடுப்பாடி 217 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பிரெண்டெர்கஸ்ட் 71 ஓட்டங்களும், கேப்டன் டெலனி 36 ஓட்டங்களும் எடுத்தனர். கிம் கார்த் மற்றும் கார்ட்னர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் தொடக்க வீராங்கனைகள் போஎபே லிட்ச்பீல்ட், அனபெல் சதர்லேண்ட் துடுப்பாட்டத்தில் மிரட்டினர்.

தொடர்ந்து பவுண்டரிகளை விரட்டிய இருவரும் அயர்லாந்துக்கு சிம்மசொப்பனமாக விளங்கினர். இந்த கூட்டணியை அயர்லாந்து பந்துவீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை.

அவுஸ்திரேலிய அணி 36வது ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி அபார வெற்றி பெற்றது. இருவரும் சதம் விளாசி 221 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

சதர்லேண்ட் 109 ஓட்டங்களும், லிட்ச்பீல்ட் 106 ஓட்டங்களும் விளாசினர்.

இது இருவருக்குமே முதல் ஒருநாள் சதம் ஆகும். இதற்கு முன் 1997ஆம் ஆண்டில் பெலிண்டா கிளார்க், லிசா கெய்ட்லி ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கி சதம் அடித்திருந்தனர்.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்